
நடிகர் காளிதாஸ் ஜெயராம் தனது முதல் திருமண அழைப்பிதழை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கியுள்ளார்.
பிரபல நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பிறகு விக்ரம், நட்சத்திரம் நகர்கிறது, ராயன் போன்ற படங்களில் நடித்தார்.
காளிதாஸ் ஜெயராமும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாடல் தாரிணி என்பவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தாரிணி, 2021-ல் நடைபெற்ற மிஸ் இந்தியா யுனிவர்ஸ் போட்டியில் 3-வது இடத்தை பிடித்தார்.
இவர்களின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் காளிதாஸ் ஜெயராம் தனது முதல் திருமண அழைப்பிதழை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார்.
நடிகர் ஜெயராம், அவரது மனைவி, நடிகர் காளிதாஸ் ஜெயராம் என அனைவரும் குடும்பத்துடன் சென்று திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர்.