
நடிகை காஜல் அகர்வால் விபத்தில் சிக்கி இறந்துவிட்டதாக வதந்திகள் பரவிய நிலையில் அதை மறுத்து அவர் விளக்கமளித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார். அண்மையில் இந்தியன் 3 படத்தில் அவர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும், தெலுங்கில் வெளியான ‘கண்ணப்பா’ படத்தில் பார்வதி தேவியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதற்கிடையில் கடந்த 2020-ல் கௌதம் கிச்சுலு என்ற தொழிலதிபருடன் திருமணம் நடந்து, 2022-ல் மகன் பிறந்த நிலையில் தற்போது திருமணம், குழந்தை, சொந்த தொழில் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அவ்வப்போது உடற்பயிற்சி செய்வது, வெளியூர் பயணம் போன்ற படங்களையும் காணொளிகளையும் தனது சமூக ஊடகப் பக்கங்களில் காஜல் அகர்வால் பகிர்ந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் அவர் விபத்து ஒன்றில் சிக்கி இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின. இதற்கு தனது எக்ஸ் தளத்தில் மறுப்பு தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :
''நான் விபத்தில் சிக்கியதாக சில ஆதாரமற்ற செய்திகள் இணையத்தில் பரவி வருகிறது. அது முற்றிலும் பொய்யானது. கடவுளின் அருளால், நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன், பாதுகாப்பாக இருக்கிறேன், மிகவும் நன்றாக இருக்கிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற தவறான செய்திகளை நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.
Kajal Aggarwal | Accident false news |