தனக்கு மிகவும் பிடித்த வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக ஜூனியர் என்டிஆர் தெரிவித்துள்ளார்.
ஜூனியர் என்டிஆர், ஜான்வி கபூர் உள்பட பலர் நடித்துள்ள ‘தேவரா’ படம் செப். 27 அன்று வெளியாகிறது.
இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய ஜூனியர் என்டிஆர், “எனக்கு மிகவும் பிடித்த வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நேரடியாக தமிழில் நடித்து அதை தெலுங்கில் டப்பிங் செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெற்றிமாறன் ஒரு நிகழ்ச்சியில், “அசுரன் படத்துக்கு பிறகு நானும் ஜூனியர் என்டிஆரும் சந்தித்து ஒரு படத்தில் சேர்ந்து பணியாற்றுவது குறித்து பேசினோம். ஆனால், நான் பொதுவாக ஒரு படத்தை முடித்துவிட்டு மற்றொரு படத்தை தொடங்க நீண்ட நேரம் எடுத்துக்கொள்வேன். அது ஒரு பிரச்னையாகவே இருந்தது" என்றார்.