கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக கடந்த ஆகஸ்ட் 31-ல் ஆந்திராவின் என்.டி.ஆர், கிருஷ்ணா, குண்டூர் போன்ற கடலோர மாவட்டங்கள் மற்றும் தெலங்கானாவின் வாரங்கல், கம்மம், மெஹபூபாபாத் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காற்றழுத்தத் தாழ்வுநிலை நேற்று கரையைக் கடந்ததால் தொடர்ச்சியாக 4-வது நாளாக கனமழை பெய்து பாதிப்பின் தாக்கம் மேலும் அதிகரித்தது. வெள்ள பாதிப்புகளில் சிக்கி இதுவரை 30-க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதல்வர் சந்திரபாபு நாயுடு.
இந்நிலையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களுக்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் தலா ரூ. 50 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.