வாக்களிக்காதது ஏன்?: நடிகை ஜோதிகா விளக்கம்

“பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கொஞ்சம் சுயநலமாகவும் இருக்க வேண்டும்”.
ஜோதிகா
ஜோதிகா

அரசியலுக்கும் வரும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகை ஜோதிகா பேசியுள்ளார்.

பார்வை மாற்றுத்திறனாளி தொழிலதிபரான ஸ்ரீகாந்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம் ‘ஸ்ரீகாந்த்’. இப்படத்தில் ஜோதிகா முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார். இப்படம் மே 10 அன்று வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய ஜோதிகாவிடம் தேர்தலில் வாக்களிக்காதது ஏன்? என கேள்வி கேட்க்கப்பட்டது.

ஜோதிகா பேசியதாவது:

“சில நேரங்களில் நாம் வெளியூரில் இருப்போம் அல்லது உடல்நிலை சரியில்லாமல் போகும். இதனால் தான் வாக்களிக்க முடியவில்லை. பொதுவாக அனைத்து தேர்தல்களிலும் கண்டிப்பாக வாக்கை செலுத்திவிடுவேன். அரசியலுக்கு வரும் எண்ணம் எனக்கு இல்லை. என்னை யாரும் அழைக்கவும் இல்லை.

என்னுடைய 2 குழந்தைகளும் படிக்கிறார்கள். எனவே தேர்வு போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

பெண்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் ஆரோக்கியம் விஷயத்தில் கொஞ்சம் சுயநலமாகவும் இருக்க வேண்டும். நாம்தான் நம் குடும்பத்துக்கு பொறுப்பு, நம் குடும்பத்தின் முதுகெலும்பு.

எனவே தினமும் ஒரு 45 நிமிடம் ஒதுக்கி பெண்கள் உடற்பயிற்சி செய்வது முக்கியம். எப்போதும் உடலை வலுவாக வைத்து கொள்ள வேண்டும்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in