தன்னை மற்றொரு பெண்ணுடன் இணைத்து பேசாதீர்கள் என்று நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி - ஆர்த்தி காதல் திருமணம் ஜூன் 4, 2009-ல் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரு மகன்கள் உள்ளார்கள்.
முன்னதாக, ஜெயம் ரவி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக செப். 9 அன்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தன்னிச்சையாக முடிவு எடுத்ததாக ஆர்த்தி ரவி அறிக்கை வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக பாடகி கெனிஷா என்பவருடன் ஏற்பட்ட பழக்கம் காரணமாக ஜெயம் ரவி தனது திருமண வாழ்விலிருந்து விலகியதாக வதந்திகள் பரவின.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயம் ரவி இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயம் ரவி பேசியதாவது:
“நான் ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். வாழு, வாழ விடு. யாரையும் என் தனிப்பட்ட வாழ்க்கையில் இழுக்காதீர்கள். என் தனிப்பட்ட வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கையாகவே இருக்கட்டும். கெனிஷா தனியாக நின்று தனது வாழ்வில் முன்னுக்கு வந்தவர், பல உயிர்களை காப்பாற்றியவர். அவர் ஒரு மனநல ஆலோசகர். நானும் அவரும் சேர்ந்து வருங்காலத்தில் மனநல மையம் ஒன்றைத் தொடங்குவதே எங்கள் நோக்கம். அதனை யாரும் கெடுக்காதீர்கள். யாரும் அதனை கெடுக்கவும் முடியாது.