விவாகரத்து கோரி நடிகர் ஜெயம் ரவி சென்னைக் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயம் ரவி - ஆர்த்தி காதல் திருமணம் ஜூன் 4, 2009-ல் நடைபெற்றது. இவர்களுக்கு ஆரவ், அயான் என இரு மகன்கள் உள்ளார்கள். அண்மைக் காலமாகவே இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்துவிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. ஜெயம் ரவியுடன் இருக்கும் புகைப்படங்களை ஆர்த்தி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் நீக்கினார்.
இந்நிலையில் ஜெயம் ரவி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் மனைவி ஆர்த்தியுடனான திருமண வாழ்விலிருந்து விலகுவதாக நேற்று (செப்.9) அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவர் ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் என சென்னைக் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். 2009-ல் பதிவு செய்யப்பட்ட தங்களின் திருமணப் பதிவை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் வைத்துள்ளார்.
இது தொடர்பான விசாரணை அக். 10 அன்று நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.