விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் முதல் படம் ‘சிக்மா’: போஸ்டர் வெளியீடு | Jason Sanjay |

சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார்...
விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் முதல் படம் 'சிக்மா'
விஜய் மகன் ஜேசன் சஞ்சயின் முதல் படம் 'சிக்மா'
1 min read

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், ஜனநாயகன் படத்துடன் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். இவர் ஏற்கெனவே விஜயின் வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றியிருப்பார். இவர் தற்போது தன் முதல் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதில், ஜேஎஸ்ஜே மீடியா என்பது ஜேசன் சஞ்சயின் தயாரிப்பு நிறுவனமாகும்.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் இந்தப் படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். படப்பிடிப்புப் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. பணத்தை மையமாக வைத்து ஆக்ஷன் பின்னணியில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. படத்திற்கு சிக்மா என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், சந்தீப் கிஷன் இருக்கும் போஸ்டர் ஒன்றையும் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Summary

New film directed by Jason Sanjay and starring Sundeep Kishan has been named as Sigma

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in