காந்திக்கும், அம்பேத்கருக்கும் விவாதம் நடப்பதைக் காண சுவாரசியமாக இருக்கும்: ஜான்வி கபூர்

"இருவரும் நம் சமூகத்திற்கு பெரிதும் உதவியுள்ளனர், எனவே அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு சுவாரசியமான விவாதமாக இருக்கும்".
காந்திக்கும், அம்பேத்கருக்கும் விவாதம் நடப்பதைக் காண சுவாரசியமாக இருக்கும்: ஜான்வி கபூர்
@janhvikapoor

அம்பேத்கர் தன் நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாகவும் தெளிவுடனும் இருந்தார் என நடிகை ஜான்வி கபூர் பேசியுள்ளார்.

ஜான்வி கபூர் நடிப்பில் ‘மிஸ்டர் & மிஸஸ் மாஹி’ படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தி லாலன்டோப்புக்கு அளித்த பேட்டியில், “காந்திக்கும், அம்பேத்கருக்கும் விவாதம் நடப்பதைக் காண சுவாரசியமாக இருக்கும்” என ஜான்வி கபூர் பேசியுள்ளார். இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

ஜான்வி கபூர் பேசியதாவது:

“அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே விவாதம் நடப்பதைக் காண சுவாரசியமாக இருக்கும் என நினைக்கிறேன். அவர்கள் எந்த கருத்துகளுக்காக நிற்கிறார்கள், ஏதாவது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அவர்களின் பார்வைகள் காலப்போக்கில் எவ்வாறு மாறிக்கொண்டே இருந்தன அல்லது ஒருவருக்கொருவர் எவ்வாறு தாக்கம் பெற்றார்கள் என்பதை அறிய விரும்புகிறேன். இருவரும் நம் சமூகத்திற்கு பெரிதும் உதவியுள்ளனர், எனவே அவர்கள் ஒருவருக்கொருவர் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு சுவாரசியமான விவாதமாக இருக்கும். அம்பேத்கர் தன் நிலைப்பாட்டில் மிகவும் உறுதியாகவும் தெளிவுடனும் இருந்தார். காந்தியின் கருத்துகளும் பரிணாமம் அடைந்துவந்தன. அவர் சாதி குறித்தும் தீண்டாமை குறித்தும் அறிதல் அதிகரிக்க அவருடைய கருத்துகள் மாறின. மூன்றாம் நபரின் பார்வையில் இருந்து அதைப் பற்றி மேலும் அறிந்துகொள்வது மிகவும் வித்தியாசமாக இருக்கும் என நினைக்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in