ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா: தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட் | JanaNayagan |

ஏற்கெனவே படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகிப் பிரபலமாகியுள்ள நிலையில்...
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா: தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்
ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா: தயாரிப்பு நிறுவனம் கொடுத்த அப்டேட்
1 min read

விஜயின் அடுத்த படமான ஜனநாயகனின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடக்கவுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன் படம், அவருக்கு கடைசி படம் என்று கூறப்படுகிறது. ஜனவரி 9 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். மேலும் மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள்.

அரசியலில் விஜய் அடியெடுத்து வைத்ததற்குப் பின் வெளியாகும் படம் என்பதால் மக்கள் மற்றும் ரசிகர்களிடையே இப்படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தைக் கே.வி.என். புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஏற்கெனவே படத்தின் ‘தளபதி கச்சேரி’ பாடல் வெளியாகிப் பிரபலமாகியுள்ள நிலையில், தற்போது, ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பை கே.வி.என் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.

இதுகுறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள தயாரிப்பு நிறுவனம், மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள புகிட் ஜலீல் மைதானத்தில் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27 அன்று நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளது.

பொதுவாகவே விஜய் தனது படங்களின் இசைவெளியீட்டு விழாக்களில் சொல்லும் குட்டி ஸ்டோரி அனைவரையும் கவரும் வகையில் அமையும். இதையடுத்து ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவின் குட்டி ஸ்டோரி என்னவாக இருக்கும் என்பதிலும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

Summary

Thalapathy Vijay's highly anticipated film, 'Jana Nayagan,' will have its audio launch in Malaysia on December 27, ahead of its January 9, 2026 release.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in