மதுபோதையில் பாதுகாப்பு காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காரணத்தால் நடிகர் விநாயகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழில் திமிரு, மரியான், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றவர் விநாயகன். இவர் மலையாளத்தில் வெளியான கம்மாட்டிப்பாடம் படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை வென்றார்.
இந்நிலையில் இவர் ஹைதராபாத் விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரருடன் மதுபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து சிஐஎஸ்எஃப் வீரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விநாயகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.