பிரபல சண்டை பயிற்சியாளர் மீது பரபரப்பு புகார் அளித்த மனைவி!

“என்னையும் என் மகன்களையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார்”.
பிரபல சண்டை பயிற்சியாளர் மீது பரபரப்பு புகார் அளித்த மனைவி!
பிரபல சண்டை பயிற்சியாளர் மீது பரபரப்பு புகார் அளித்த மனைவி!

பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மீது அவரது மனைவி, அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தமிழ் உட்பட பல மொழி படங்களில் சண்டை பயிற்சியாளராக பணியாற்றி வருபவர் ஜாக்குவார் தங்கம். இவர் சென்னை எம்.ஜி.ஆர். நகர் அண்ணல் காந்தி தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இவரின் மனைவி சாந்தி தனது கணவர் ஜாக்குவார் தங்கத்தின் மீது அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது: “நான் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் ஜாக்குவார் தங்கத்துக்கு 23 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் இருந்து வருகிறது. கடந்த 15 அன்று அந்த இளம்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்த என்னுடைய கணவர், என்னையும் என் மகன்களையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிட்டார். எனவே இது குறித்து விசாரித்து இருவரும் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று புகார் அளித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து இந்த புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in