‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள்?: விளக்கமளித்த நடிகர் அஜ்மல்

“அதை பற்றி நான் இப்போது சொல்ல மாட்டேன். விரைவில் படக்குழுவிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்”.
நடிகர் அஜ்மல்
நடிகர் அஜ்மல்@actor_ajmal

‘கோட்’ படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்திருக்கிறார்களா? என்ற கேள்விக்கு, “விரைவில் படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வரும்” என நடிகர் அஜ்மல் பேசியுள்ளார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'கோட்' செப்டம்பர் 5 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தில் பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கோட் படத்தில் ஏஐ மூலம் விஜயகாந்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் சிஎஸ்கே வீரர்கள் நடித்திருக்கிறார்களா? என்ற கேள்விக்கு, “விரைவில் படக்குழுவிடம் இருந்து அறிவிப்பு வரும்” என நடிகர் அஜ்மல் தெரிவித்தார்.

எஸ்எஸ் மியூசிக் யூடியூப் சேனலில் அவர் அளித்த பேட்டியில், “அதை பற்றி நான் இப்போது சொல்ல மாட்டேன், அது இப்போது பகிர்ந்து கொள்ளும் விஷயமும் கிடையாது. விரைவில் படக்குழுவிடம் இருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும். அவர்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் எனக்கே புதிதாகத்தான் இருக்கிறது. எனவே அப்படி ஒன்று நடக்கலாம், நடக்காமலும் போகலாம்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in