
2015-ல் வெளியான ‘இது என்ன மாயம்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ்.
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், மகா நடி படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெறவுள்ளது.
தனது பள்ளித் தோழரும் துபாயைச் சேர்ந்த தொழிலதிபருமான ஆண்டனி தட்டில் என்பவரை கீர்த்தி சுரேஷ் கடந்த 15 வருடங்களாகக் காதலித்து வருவதாகவும் இந்தக் காதல் தற்போது திருமணம் வரை வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி தட்டிலின் திருமணம் டிசம்பர் 11 அன்று கோவாவில் உள்ள ரிசார்டில் நடைபெறவுள்ளது. இத்திருமணத்தில் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளவுள்ளார்கள்.
ஊடகங்களில் திருமணம் குறித்த செய்தி வெளியாகிவிட்டதால் கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து விரைவில் முறையான அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.