ஜன நாயகன் கடைசி படமாக இருக்குமா என்று விஜயிடம் தான் கேட்டதாகவும் அதற்கு விஜய் பதிலளித்ததாகவும் நடிகை மமிதா பைஜு தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியல் அறிவிப்பை வெளியிடும்போது, "அரசியல் எனக்கு பொழுதுபோக்கு அல்ல; அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவே விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சிப் பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன். அதுவே தமிழ்நாட்டு மக்களுக்கு நான் செய்யும் நன்றி கடனாகக் கருதுகிறேன்" என்று விஜய் குறிப்பிட்டிருந்தார். இதன்படி, ஜன நாயகன் திரைப்படமே விஜயின் கடைசி படம்.
இந்நிலையில், ஜன நாயகன் படத்தில் விஜயுடன் இணைந்து நடித்துள்ள மமிதா பைஜூ, விஜயிடம் கடைசி படம் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். இதற்கு அவரும் பதிலளித்திருக்கிறார். அயர்லாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் விஜயுடனான இந்த உரையாடலை மமிதா பைஜூ வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
"விஜயிடம் நான் நேரடியாகக் கேட்டேன். இது (ஜன நாயகன்) கடைசி படமாக இருக்குமா? எல்லோரும் இது தான் கடைசி படம் என்கிறார்கள் என்றேன். அதற்கு, "தெரியவில்லை, தேர்தல் முடிவுகளைப் பொறுத்து பார்க்கலாம்" என்று விஜய் பதிலளித்தார்.