லோகேஷ், ஷ்ருதியின் ‘இனிமேல்’ பாடல் வெளியானது

முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் லோகேஷ் கனகராஜைப் பார்க்க முடிகிறது.
லோகேஷ், ஷ்ருதியின் ‘இனிமேல்’ பாடல் வெளியானது
லோகேஷ், ஷ்ருதியின் ‘இனிமேல்’ பாடல் வெளியானது@RKFI
1 min read

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ஷ்ருதி ஹாசன் இணைந்து நடித்துள்ள ‘இனிமேல்’ ஆல்பம் பாடல் வெளியாகி உள்ளது.

ஷ்ருதி ஹாசன் இசையமைத்து, லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள ‘இனிமேல்’ பாடலின் அப்டேட்டை, கமல் ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டது. இந்த ஆல்பம் பாடலின் வரிகளை கமல் எழுதியுள்ளார்.

இருவருக்கும் இடையே காதல், சண்டை, பிரிவு, மீண்டும் இணைதல் போன்ற காட்சிகளுடன் இப்பாடல் உருவாகியுள்ளது. இப்பாடல் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தற்போது நடிப்பிலும் அசத்தியுள்ளார். முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் அவரை பார்க்க முடிகிறது.

துவாரகேஷ் பிரபாகர் இந்த இசை ஆல்பத்தின் இயக்குநராக உள்ளார். புவன் கோடா, ஒளிப்பதிவாளர்.

logo
Kizhakku News
kizhakkunews.in