இந்தியன்-2: முதல் பாடல் வெளியீடு

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியன்-2
இந்தியன்-2

இந்தியன்-2 படத்தின் முதல் பாடலான ‘பாரா’ இன்று மாலை வெளியாகி உள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான மிகப்பெரிய வெற்றி படம், ‘இந்தியன்’. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவாகி உள்ளது. இப்படம் ஜூலை 12-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இசை - அனிருத். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ இன்று வெளியாகி உள்ளது. இப்பாடலை பா. விஜய் எழுதியுள்ளார். அனிருத் மற்றும் ஷ்ருதிகா ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா ஜூன் 1 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in