இந்தியன் 2 படத்துக்குத் தடை கோரி வழக்கு: விளக்கம் அளிக்க மதுரை நீதிமன்றம் உத்தரவு!

இந்த வழக்கு விசாரணை ஜூலை 9 அன்று நடைபெற உள்ளது.
இந்தியன் 2 படத்துக்குத் தடை கோரி வழக்கு: விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!
இந்தியன் 2 படத்துக்குத் தடை கோரி வழக்கு: விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

இந்தியன் 2 படத்துக்குத் தடை கோரிய வழக்கில், விளக்கம் அளிக்க படக்குழுவினருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவாகி உள்ளது.

இப்படம் ஜூலை 12-ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இசை - அனிருத். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.

இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த வர்மக்கலை, தற்காப்புக்கலை மற்றும் ஆராய்ச்சி அகாடமியின் தலைமை ஆசான் ராஜேந்திரன் என்பவர் மதுரை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், இந்தியன் படத்தின் முதலாம் பாகம் தயாரித்த போது, அந்த படத்தில் கமல் பயன்படுத்தும் வர்மக்கலை குறித்து என்னிடம் ஆலோசனை பெற்றனர். அதற்காக எனது பெயரும் அந்த படத்தில் இடம் பெற்றது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்தியன் - 2 படத்தின் டிரைலரில் முதலாம் பாகத்தில் பயன்படுத்தப்பட்ட வர்மக்கலை குறித்த காட்சிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து என்னிடம் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை.

இதனால் திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்கள் என எந்த வகையிலும் படத்தை வெளியிட நிரந்தர தடை விதித்து உத்தரவிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில், விளக்கம் அளிக்க படக்குழுவினருக்கு மதுரை நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்த வழக்கு விசாரணை ஜூலை 9 அன்று நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in