இந்தியன் 2 படத்தில் 12 நிமிடக் காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவானது.
இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இசை - அனிருத். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.
இப்படம் ஜூலை 12 அன்று வெளியான நிலையில் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையேப் பெற்று வருகிறது. 3 மணி நேரம் படம் ஓடுவதும் அதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டது.
சமீபத்தில், இந்தியன் 2 படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில், 12 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.