இந்தியன் 2 படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கம்: தகவல்

இப்படம் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்தியன் 2
இந்தியன் 2
1 min read

இந்தியன் 2 படத்தில் 20 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து 1996-ல் வெளியான படம் ‘இந்தியன்’. இப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு ‘இந்தியன்-2’ படம் உருவானது.

இப்படத்தில் காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர் போன்றோர் நடித்துள்ளனர். இசை - அனிருத். ஒளிப்பதிவு - ரவி வர்மன்.

இப்படம் ஜூலை 12 அன்று வெளியான நிலையில் பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் 20 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே 3 மணி நேரமாக இருந்த இப்படம் இன்று (ஜூலை 14) முதல் 2.40 மணி நேரம் ஓடக்கூடிய படமாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும் இது குறித்து படக்குழுவினரிடம் இருந்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in