

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதையில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் சாய் அபயங்கர்.
ஜி ஸ்குவாட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய லோகேஷ் கனகராஜ் தனது முதல் படமாக ‘ஃபைட் கிளப்’ படத்தை தயாரித்து வழங்கினார். இதைத் தொடர்ந்து தனது 2-வது படத்தை தயாரிக்கிறார் லோகேஷ் கனகராஜ். எல்சியு (லோகேஷ் சினிமேடிக் யுனிவர்ஸ்) படங்களில் அடுத்ததாக இப்படம் உருவாகிறது.
ராகவா லாரன்ஸ் இப்படத்தில் நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் கதையில் உருவாகும் இப்படத்துக்கு ‘பென்ஸ்’ என பெயரிடப்பட்டது. ‘ரெமோ’, ‘சுல்தான்’ ஆகிய படங்களை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கட்சி சேர’ மற்றும் ‘ஆசக் கூட’ ஆகிய ஆல்பம் பாடல்கள் மூலம் பிரபலமானவர் சாய் அபயங்கர். இவர் பிரபல பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணி தம்பதியினரின் மகனாவார்.