புதிய சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு

“படத்தின் இசை வேறு, பின்னணி இசை வேறு. இவை அனைத்துக்கும் மாறுப்பட்டது தான் சிம்பொனி”.
புதிய சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு
புதிய சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு@ilaiyaraaja

என் வேலையை செய்வதே என்னுடைய வேலை என இசையமைப்பாளர் இளையராஜா பேசியுள்ளார்.

இசை ரசிகர்களுக்கு இன்று மாலை ஒரு இன்பச் செய்திக் காத்திருக்கிறது என இளையராஜா பதிவிட்டிருந்தார். இந்நிலையில் 35 நாள்களில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன் எனக் கூறி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இளையராஜா பேசியதாவது:

“தினமும் என்னை பற்றி ஏதோ ஒரு வகையில் ஒரு காணொளி வருவதாக எனக்கு வேண்டியவர்கள் சொல்லுவார்கள். அதனை எல்லாம் நான் கவனிக்க மாட்டேன். மற்றவர்களை கவனிப்பது என்னுடைய வேலை இல்லை. என் வேலையை செய்வதே என்னுடைய வேலை. நான் என் வழியில் தெளிவாக பயணம் செய்துக் கொண்டிருக்கிறேன். இந்த இடைப்பட்ட நேரத்தில் நான் ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன். நிறைய வேலைகள் இருந்தாலும் 35 நாள்களில் ஒரு சிம்பொனியை எழுதிவிட்டேன். படத்தின் இசை வேறு, பின்னணி இசை வேறு. இவை அனைத்துக்கும் மாறுப்பட்டது தான் சிம்பொனி இசை. எனவே ஒரு சுத்தமான சிம்பொனியை எழுதி விட்டேன் என்ற இந்த உற்சாகமான செய்தியை என் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in