காப்புரிமை விவகாரம்: சன் பிக்சர்ஸுக்கு இளையராஜா நோட்டீஸ்

அனுமதி பெறாமல் பயன்படுத்திய அந்த பாடலின் இசையை நீக்க வேண்டும், இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸுக்கு இளையராஜா நோட்டீஸ்
சன் பிக்சர்ஸுக்கு இளையராஜா நோட்டீஸ் @sunpictures

ரஜினியின் ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘கூலி’ படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில் தன்னுடைய அனுமதி இல்லாமல் “வா வா பக்கம் வா” பாடலின் இசையை டீசரில் பயன்படுத்தி இருப்பதாகக் கூறி, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார் இளையராஜா.

அனுமதி பெறாமல் பயன்படுத்திய அந்த பாடலின் இசையை நீக்க வேண்டும், இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘விக்ரம்’, ‘ஃபைட் கிளப்’ போன்ற படங்களிலும் தன்னுடைய இசையை முறையான அனுமதியின்றி பயன்படுத்தியதாக இளையராஜா அந்த நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in