மகளைப் பறிகொடுத்ததால் பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை: இளையராஜா

இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி உடல்நலக் குறைவால் கடந்த ஜன. 25 அன்று காலமானார்.
இளையராஜா
இளையராஜா

மகளைப் பறிகொடுத்த காரணத்தால் பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை என இசையமைப்பாளர் இளையராஜா பேசியுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பாடகியுமான பவதாரிணி (47) உடல்நலக் குறைவால் கடந்த ஜன. 25 அன்று காலமானார்.

இன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு இளையராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்ல, “பிறந்த நாள் வாழ்த்துகளை நீங்கள் தான் எனக்கு சொல்கிறீர்களே தவிர, என்னுடைய மகளை நான் பறிகொடுத்த காரணத்தால், எனக்கு பிறந்த நாள் கொண்டாட்டம் இல்லை. உங்களுக்காகத்தான் இந்தக் கொண்டாட்டம்” எனப் பதிலளித்தார்.

முன்னதாக நடிகர் தனுஷ், இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in