கண்ணால் கண்ட அதிசய மனிதர் இளையராஜா: ரஜினி புகழாரம் | Ilaiyaraaja | Rajinikanth |

கண்ணால் கண்ட அதிசய மனிதர் இளையராஜா: ரஜினி புகழாரம் | Ilaiyaraaja | Rajinikanth |

இளையராஜாவுக்கு இல்லாத திமிர் வேறு யாருக்கு இருக்கும் என்றும் பெருமிதம்...
Published on

கண்ணால் கண்ட அதியச மனிதர் இளையராஜா என்று நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினையும் இளையராஜாவையும் புகழ்ந்து பேசினார்.

அவர் பேசியதாவது :

”இந்திய நாட்டு அரசியலில் ஒரு நட்சத்திரமாக இருந்து கொண்டு, தமிழ்நாட்டு அரசியலில் இந்திய நாட்டு ஆளும் கட்சியினருக்கும், புதிய பழைய எதிர்க்கட்சியினருக்கும் ஒரு சவாலாக இருந்து கொண்டு, “வாங்க, 26-ல் பார்க்கலாம்” என்று தனக்கே உறுதியாக, அந்த புன்னகையுடன் செயல்பட்டு கொண்டிருக்கும் முதல்வர் அவர்களுக்கு மதிப்பு அளிக்கும் வகையில், என்னுடைய நண்பர், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் வந்து, இளையராஜா சார் அவர்கள், “எப்போது வந்து இந்த சிம்பொனி எழுதி, இது லண்டனில் வந்து ரெக்கார்ட் பண்ணப் போறேன், இது ஒரு மிகப்பெரிய சாதனை” என்று அறிவித்தபோது, முதல்வர் ஸ்டாலின் இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு நேரில் சென்று அவரை வாழ்த்தினார்.

அதுமட்டுமல்ல, இந்த ரெக்கார்டிங்கை முடித்துவிட்டு வந்த பிறகு, அவருக்கு விமான நிலையத்தில் அரசு மரியாதையுடன் வரவேற்பு அளித்து, அவருக்கு பெரிய கௌரவம் செலுத்தப்பட்டது. இந்த ஒரு மாபெரும் விழாவை, அந்த எளிய பிரம்மாண்ட மனிதனுக்கு, இந்த பிரம்மாண்டமான விழாவை நடத்தி, அங்கு வந்து சிம்பொனி வாசித்தவர்களை அரசு செலவில் கொண்டு வந்து, நம்ம கண்ணுக்கும் காதுக்கும் விருந்தாக அமைத்திருக்கிறார். அவருக்கு உங்கள் சார்பிலும், என் சார்பிலும், என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் அதிசய மனிதர்களை புராணத்தில் படித்திருக்கிறேன், இதிகாசத்தில் படித்திருக்கிறேன், ஆனால் கண்ணால் பார்த்த அதிசய மனிதர் இளையராஜா.

இங்கு நான் “சாமி” என்று கூப்பிட்ட இளையராஜா அவர்களைப் பற்றி பேச வேண்டும் என்றால், நிறைய பேசலாம், நிறைய பேச வேண்டும். ஆனால், நேரம் கருதி, சிஎம் அவர்களுடைய நேரத்தை நான் அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அதற்காக, சில விஷயங்கள் மட்டும். இளையராஜா ஒரு இசையமைப்பாளராக, உலகத்தில் வாழும் அனைத்து தமிழக மக்களின் ரத்தம், நரம்பு, நாடியில் அவருடைய இசையும் பெயரும் ஊறிப் போயிருக்கிறது.

இப்போது ஜஸ்ட் ஒரு நோட் அடித்தால், எப்படி நீங்கள் பிடித்து, “இது இவர் பண்ணியது” என்று சொல்கிறீர்கள், பாருங்கள். 70கள், 80கள், 90களில் வந்து போட்ட பாடல்கள், இப்போது கூட ஒரு படத்தில் இரண்டு, மூன்று பாடல்கள் போட்டால், அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். இப்போது கூட, கூலியில் இரண்டு பாடல்கள் நாம் பயன்படுத்திக் கொண்டோம். அந்த மாதிரி ஒரு இசையமைப்பாளர் இளையராஜா.

அவரைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். அதைவிட முக்கியமாக, ஒரு மனிதனாக, மகா பெரிய மாமனிதனாக அவரை நான் பார்த்திருக்கிறேன். அதற்காக அவர் மீது ரொம்ப கௌரவம். 1600 படங்கள், 8000 பாடல்கள், 1500 பாடல்கள் பாடியிருக்கிறார், எட்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். 50 வருடங்கள், இது சாதாரண விஷயமா?

அவரை முதல் முதலில் 1974ல் ஜி.கே. வெங்கடேஷின் அசிஸ்டெண்ட்டாக இருக்கும்போது, பார்த்தபோது, அந்த ஸ்டுடியோவில் ஒரு சின்ன பையனைப் பார்த்தேன். அதற்குப் பிறகு, புவனா ஒரு கேள்விக்குறி வந்தபோது, ஒரு இளைஞன் இளையராஜா இன்சர்ட் பண்ணி, ஒரு நல்ல கிளாஸ், ஷூ போட்டு அவரை நான் பார்த்தேன்.

அதற்குப் பிறகு, ஒரு நாள் திடீரென்று பார்க்கும்போது, வேஷ்டி, ஜிப்பா, ருத்ராக்ஷம், முடி மொட்டையடித்து, பொட்டு வைத்து இருக்கிறார். உடனே நான் “சாமி” என்று கூப்பிட்டேன். “இது என்ன சாமி?” என்று கேட்டதற்கு, “இதுதான் சாமி ஒரிஜினல்” என்று சொன்னார். அப்போது இருந்து, அவரை எப்போதும் “சாமி” என்று கூப்பிடுகிறேன்.

அந்த மாதிரி, ஒரு வழியாக பஞ்சு அருணாச்சலம் கூட ஒரு படத்துக்கு கம்போஸிங் போயிருந்தேன். சூட்டிங் இல்லாமல், அப்படி போயிருக்கும்போது, ஜஸ்ட் ராகங்கள் வருது. ஆறு மணிக்கு தொட்டு, அப்படியே கொட்டுகிறார். அதாவது, பழைய காலத்தில் பட்டிக்காட்டில் நெல்லு குவியல் இருக்கும். ஒருத்தன் அளந்து கொடுப்பான், இன்னொருத்தன் தள்ளி வைத்து கொடுப்பான். அளந்து கொடுக்கிறவன், தள்ளி வைப்பவனைப் பார்க்கவே மாட்டான்.

அந்த மாதிரி, இளையராஜா ராகங்களை, ராக சரஸ்வதி, ராக தேவனுக்கு அப்படியே தள்ளிக் கொடுப்பார். இவர் ஆர்மோனியத்தில் அள்ளிக் கொடுக்கிறார். இந்த மாதிரி சில விஷயங்கள் மட்டும் நான் சொல்கிறேன், நேரம் கருதி.

ஒரு முறை, “வாங்க ரஜினி, உங்களிடம் பேச வேண்டும்” என்று சொன்னார்கள். “என்ன சமாச்சாரம்?” என்று கேட்டால், “இந்த மாதிரி, நம்ம பாவலர் அண்ணா மறைந்துவிட்டார். இன்னொருவர் பாஸ்கர், இன்னொருவர் அமரன். கங்கை செட்டில் ஆகிவிட்டான். மியூசிக் பண்ணி, டைரக்ட் பண்ணி செட்டில் ஆகிவிட்டான். இந்த பாஸ்கரை கொஞ்சம் செட்டில் பண்ண வேண்டும். நீங்கள் ஒரு படம் பண்ண வேண்டும்” என்று சொன்னார்கள்.

“சரி, சாமி, நான் பண்ணுகிறேன்” என்று சொல்லி, டேட் கொடுத்தேன். பஞ்சு அருணாச்சலம் பேசிக்கொண்டிருந்தார். “ராஜாதி ராஜா” படம் பண்ணினோம். அதற்குப் பிறகு, ஆர். சுந்தரராஜன் ஒரு பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார்.

அதற்குப் பிறகு, பாஸ்கர் கம்ப்ளீட் படத்தைப் பற்றி பேசவே மாட்டார், வேறு விஷயம்தான் பேசுவார். எனக்கு ஒரு டென்ஷன் ஆகிவிட்டது. பஞ்சு சார் ஊருக்கு ஏதோ சொந்த காரியமாகப் போயிருந்தார். ராஜா சாமி கிட்ட பிரசாத் ஸ்டுடியோவுக்கு போய், “சாமி, இந்த மாதிரி ரொம்ப டிஸ்டர்பா இருக்கு. படம் எப்படி வரும் தெரியவில்லை. இந்த மாதிரி பாஸ்கர் இருக்கிறார்” என்று சொன்னேன்.

அவர் என்னைப் பார்த்து சிரித்தார். “இந்தக் கதையை ஒரு லைன் கூட நான் படிக்கவில்லை. எனக்குத் தெரியாது. நீங்கள் படம் பண்ணுங்கள். இந்தப் படம் சில்வர் ஜூபிலி போகவில்லை என்றால், நான் ஆர்மோனியத்தைத் தொட மாட்டேன், பாட மாட்டேன்” என்று சொன்னார்.

அங்கு யாரோ ப்ரொடியூசர் இருந்தார், இவர்தான் சாட்சி. எனக்கு தக்கென்று அடித்தது. “இவர் சொல்றது செய்யும் ஆளா!” என்று நினைத்தேன். “என்னங்க, இப்படி சொல்றீங்க?” என்று கேட்டேன். “நான் சொல்லவில்லை, சாமி. அந்த மூகாம்பிகை, அந்த தாய் சொல்ல வைக்கிறாள்” என்று சொன்னார்.

அவ்வளவுதான், “நீங்கள் போங்கள்” என்று சொன்னார். எனக்கு இன்னும் டென்ஷன் ஏறிவிட்டது. “என்னயா இது?” என்று நினைத்தேன். அதற்கு, ஊருக்கு போகும் பாஸ்கர், மார்னிங் வந்து, “ரஜினி, நல்ல மழை. இன்னைக்கு சூட்டிங் இல்லை. இன்னும் ரெண்டு நாள் மழை. மட்டன் குழம்பு, இட்லி” என்று சொல்லி, 25 வாரம் ஓடியது.

எனக்கு ரொம்ப டென்ஷன் ஆகிவிட்டது. அதற்குப் பிறகு, நானே மெண்டலி முடிவு பண்ணியிருந்தேன். “நோ” என்று சொல்லி, 10 எக்ஸிபிட்டர்ஸ், 10 சென்டர்களில், நமக்குத் தெரிந்தவர்கள் கிட்ட படம் சரியாக கூட, நாமே பணம் கொடுத்து சில்வர் ஜூபிலி ஓட்டுவோம் என்று இருந்தது.

சொன்ன மாதிரி, சில்வர் ஜூபிலி, சில்வர் ஜூபிலி! என்ன ஒரு நம்பிக்கை, கான்ஃபிடன்ஸ், நம்பிக்கை இருக்கு! இந்த மாதிரி ஒரு நம்பிக்கை சரண்டர். சொன்னது எல்லாம் பலிக்கும்.

அந்த மாதிரி, கம்ப்ளீட்லி, இளையராஜா, ரஜினிகாந்த், விஜயகாந்த், ராமராஜன், முரளி, மோகன், எல்லாருக்கும் ஒரே டைமில் மியூசிக் போட்டுக் கொடுக்கிறார். ஆனால், எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் பண்ணுவார் என்று சொல்வது உண்மையில், கமல்ஹாசன் மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ரா.

ஆல்ரெடி சொல்லியிருக்கிறேன், சிஎம் முன்னால் கூட பதிவு செய்கிறேன். கமல் கதை, அவர் கொஞ்சம் ரொம்ப ஜாஸ்தி. இது ஒன்னும் இல்லைங்க. “தேரோடும் வீதியிலே, மான் போல் வந்தவனை யார் அடிச்சாரோ, உன்னை யார் அடிச்சார்?” அவர் மட்டும் பாட்டு, ஆயிரம் பேர் அப்படியே கண்ணால் அழுந்துவீர்கள். ஒவ்வொரு பாட்டும் அந்த மாதிரி.

சரி, அந்த மாதிரி, இளையராஜா ஒரு கொடிகட்டி பறந்தார். ஆனால், ஒரு விஷயம், எப்போதும் சக்ஸஸ் மட்டுமே வந்துகொண்டிருந்தால், அந்த சக்ஸஸின் அருமை தெரியாது. அப்போ அப்போ பெயிலியர் வரணும். பெயிலியர் வந்தால்தான் சக்ஸஸின் அருமை தெரியும். ஸ்பீட் பிரேக்கர் மாதிரி,

கம்ப்ளீட்லி அவர் அப்படி போய்க்கொண்டிருந்தார். இன்னொரு இசையமைப்பாளர் வருகிறார். உடனே எல்லாரும் அந்தப் பக்கம் சாய்கிறார்கள். அவர் போட்டு, கோடி கோடியாக சம்பாதித்த ப்ரொடியூசர்ஸ், டைரக்டர்ஸ், எல்லாம் போகிறார்கள். ஆர்டிஸ்டுக்கு போகிறார்கள், ரஜினிகாந்த் உட்பட.

ஆனால், இளையராஜா வண்டி டி நகரில் இருந்து பிரசாத் ஸ்டுடியோவுக்கு ஆறு மணிக்கு எப்போதும் போய்க்கொண்டே இருந்தது. இவர் வாசித்துக்கொண்டே இருந்தது. ரெக்கார்டிங் நடந்துகொண்டே இருந்தது.

அதற்குப் பிறகு, திடீரென்று பாஸ்கர் காலமானார். திடீரென்று, அவர் உயிராக நேசித்த மனைவி ஜீவா காலமானார். அதற்குப் பிறகு, பவதாரணி, ஒரே மகள். அவர் இறந்து போகிறார். ஆனால் இவரது ஆர்மோனியம் வாசித்துக்கொண்டே இருக்கும். எந்த சலனமும் இல்லை. அவருடைய உலகமே வேறு. நம்ம உலகத்தில் அவர் இல்லை. இசை உலகத்தில் அவர் இருக்கிறார். அப்போ அப்போ இங்கு வந்துவிட்டு போகிறார், அவ்வளவுதான்.

அதற்குப் பிறகு, திடீரென்று பிரசாத் ஸ்டுடியோவில், “நீங்கள் இங்கு இருக்கக் கூடாது, காலி பண்ணுங்கள்” என்று சொல்கிறார்கள். அங்கு ரெக்கார்ட் பண்ண வேண்டும் என்று எத்தனை ப்ரொடியூசர்களிடம் சண்டை போட்டிருக்கிறார், எத்தனை டைரக்டர்கள் எழுந்திருக்கிறார்கள்.

சரி, ஓகே, பரவாயில்லை என்று சொல்லி, அதே ரோடில் ஒரு பிரீமியர் தியேட்டரை வாங்கி, ரெக்கார்டு தியேட்டராக கன்வர்ட் பண்ணி, எந்த ஸ்டுடியோ இருந்ததோ, அந்தப் பக்கம் “இளையராஜா” என்று போர்டு போட்டார்.

அதற்குப் பிறகு, ஒரு கம்பெனிக்கு ஒரு உரிமை கொடுத்திருந்தார்கள். ப்ரொடியூசரிடம் வாங்கி, பணம் வாங்கி, ஒரு படத்தை வாங்கிக் கொடுத்திருந்தார்கள். திடீரென்று கையை விட்டுவிட்டார்கள். எந்த பணமும் இல்லை. “உங்களுக்கு இது இல்லை” என்று சொல்லிவிட்டு, இவர் விட மாட்டார். கோர்ட்டுக்கு போனார். ஜெயித்தார்.

எல்லா ரைட்ஸ், எல்லா ராயல்டி இவருக்குதான். அவருக்கு தலைமை திஸ்டிங் இல்லாமல், எந்த டிவியிலோ, எந்த ரேடியோவிலோ, இந்தப் படத்திலோ, எங்கோ கச்சேரி காசல பாடக் கூடாது என்று சொல்லி, 9 மணிக்கு அறிவித்தார்.

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அமெரிக்காவில் பாடிக்கொண்டிருக்கிறார். “ஆறு மணி சாமி சார், இப்போ சொன்னால், அவர் பாடிக்கொண்டிருக்கிறார். உங்கள் பாட்டு பாட முடியாது” என்று சொன்னார். “சட்டம் எல்லாருக்கும் ஒன்றுதானே? என்ன இருக்கிறதோ, அதைப் பண்ணுங்கள்” என்று சொன்னார்.

எஸ்.பி.பி. நிச்சயம் பாட மாட்டான், அப்படி அவன் கோபித்துக் கொண்டால் அவன் என் நண்பனே இல்லை.” என்று சொன்னார். “அவன் பாடிக்கொண்டு இங்கு வந்து என்னைப் பார்ப்பான்” என்று சொன்னார்.

அதே மாதிரி, எஸ்.பி.பி. அங்கு பாடிக்கொண்டிருக்கிறார். நியூஸ் போகிறது. அங்கேயே அறிவித்து, “இனிமேல் இளையராஜா பாட்டு பாட மாட்டேன், வேறு மியூசிக் டைரக்டர் பாட்டு பாட மாட்டேன்” என்று நிறுத்திவிட்டு, சென்னை வந்த உடனே பார்த்தார்கள்.

ரெண்டு பேர் இண்டஸ்ட்ரியை இழந்தது. ஒருவர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், இன்னொருவர் விவேக். இந்த ரெண்டு பேர் இடத்தையும் யாராலும் நிரப்பவே முடியாது.

அந்த கோவிட்டில் எஸ்.பி.பி. இறந்த உடனே, பிரதருக்கு சிந்தாத கண்ணீர், பொண்டாட்டிக்கு சிந்தாத கண்ணீர், மகளுக்கு சிந்தாத கண்ணீர், நண்பனுக்காக கண்ணீர் சிந்தவில்லை.

அதற்குப் பிறகு, “எது சிறந்தது பாட்டா? மெட்டா?” என்று ஒரு சர்ச்சை வந்தது. அப்போது இளையராஜா மீடியாவிடம் வந்தார். “இந்த மாதிரி டிபேட் நடந்துட்டு இருக்கு” என்று சொல்லும்போது, “அப்படியா? அது எல்லாருக்கும் தெரியாது. சரியா, ரெண்டு நாள் வந்து, 300 பேஜஸ் வந்து, சிம்பொனி எழுதியிருக்கேன். இது அங்கு வந்து ரெக்கார்ட் பண்ணப் போறேன்” என்று மீடியாவிடம் சொல்கிறார்.

“இந்த மாதிரி சிம்பனி, யாருமே இதுவரை எழுதவில்லை. இது பண்ணி, இளையராஜாவுக்கு இல்லாத திமிரு வேறு யாருக்கு இருக்கும்?” என்று சொல்கிறார்கள். “வேறு யாரு சொல்லியிருந்தால் ஒத்திருப்பீர்களா?” என்று கேட்கிறேன். “இளையராஜா, அதற்கு தகுதியான மனுஷர்.”

அதற்குப் பிறகு, ரெக்கார்ட் பண்ணி வந்தார். “இந்த இளையராஜாவை எந்த அளவுகோல் வைத்தும் அளக்க முடியாது. அதற்கு மீறி நின்னவர்” என்று சொல்கிறார்.

82 ஆண்டுகள், இன்னும் பாருங்கள், என்ன பண்ணுறார் என்று சொல்லுங்கள். அது இளையராஜா. இன்கிரிடிபிள் இளையராஜா. நீதி, நியாயம், உண்மையாக கடினமாக உழைத்தால், எல்லாமே உன் பின்னால் வரும். பின்னால் போகவே முடியாது.

அந்த மியூசிக்கின் பவர் நீங்கள் பார்த்தீர்கள். கமல்ஹாசன் சும்மா ஒரு நாலு வரி பாடினார். அந்த நாலு வரியும் ஒன்னுதான். இவ்வளவு பேசினதும் ஒன்னுதான். அதுதான் அந்த மியூசிக்கின் பவர்.

அதற்கு அரசன், ராஜா. அவர்கள் என்றும் நல்லா இருக்கணும். நீங்கள் நண்பர், உங்களுடன் இத்தனை வருடங்கள், இத்தனை நடந்திருக்கு. நம்ம பழகணும் என்று இருப்பதே மிகப்பெரிய பாக்கியம்.

தயவு செய்து, உங்கள் சுயசரிதையை படமாக எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியிடுங்க. நாங்கள் எல்லாரும் பார்க்க ஆவலாக இருக்கிறோம். என்னை விட்டால், நானே ஸ்கிரீன் எடுத்து கொடுக்கிறேன்”

இதைத் தொடர்ந்து இளையராஜா உரையாற்றியபோது குறுக்கிட்ட ரஜினிகாந்த்

“ஜானி படப்பிடிப்பின்போது சென்னை விஜிபியில் நான் தங்கி இருந்தேன். அப்போது நானும் இயக்குநர் மகேந்திரனும் இரவு மது அருந்தினோம். அப்போது இளையராஜாவும் இருந்தார். அவரிடம் வேண்டுமா என்று கேட்டதற்குச் சம்மதித்தார். அன்று சிறிதளவே அருந்தியபோதும் அவர் போட்ட ஆட்டத்தை மறக்கவே முடியாது. இளையராஜா நிறைய காதல் செய்திருக்கிறார். அதனால்தான் இப்படிப்பட்ட பாடல்கள் எல்லாம்.”

என்று புன்னகையுடன் பகிர்ந்துகொண்டார்.

Ilaiyaraaja | Ilaiyaraaja 50 | Rajinikanth | MK Stalin |

logo
Kizhakku News
kizhakkunews.in