ஐசி814 இணையத் தொடர் தொடர்பாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அந்த நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
1999-ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவத்தை மையமாகக் கொண்டு ஐசி814 - தி கந்தஹார் ஹைஜாக் என்கிற இணையத் தொடர் உருவாகியுள்ளது. இத்தொடர் கடந்த ஆகஸ்ட் 29 என்று வெளியானது.
இதைத் தொடர்ந்து இத்தொடரில் விமானத்தை கடத்திய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ‘போலா’, ‘ஷங்கர்’ போன்ற ஹிந்து பெயர்கள் வைக்கப்பட்டிருப்பதாகச் சர்ச்சை எழுந்தது.
இதன் பிறகு இது குறித்து விளக்கம் அளிக்க ‘நெட்ஃபிளிக்ஸ்’ நிறுவனத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சம்மன் அனுப்பியது.
இந்நிலையில், ஐசி814 இணையத் தொடரின் உள்ளடகத்தினை ஆய்வு செய்வதாகவும், வருங்காலத்தில் தேசத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக தங்களின் உள்ளடகங்கள் சரிபார்க்கப்படும் என்றும் ‘நெட்ஃபிளிக்ஸ்’ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.