மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த மோகன்லால்!

மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாக குழுவை கூண்டோடு கலைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மோகன்லால்
மோகன்லால்@Mohanlal
1 min read

பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மோகன்லால்.

மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்படும் பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

முன்னதாக, மலையாள திரைப்பட நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை புகார் எழுந்த நிலையில், சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.

இதன் பிறகு சித்திக் மீது புகார் எழுப்பிய மலையாள நடிகை ரேவதி சம்பத், நடிகர் ரியாஸ் கான் மீதும் குற்றம்சாட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து மலையாளத் திரையுலகில் மேலும் பல பாலியல் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் பாலியல் புகார் எதிரொலியாக மலையாள நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மோகன்லால்.

மேலும், மலையாள நடிகர் சங்கத்தின் நிர்வாக குழுவை கூண்டோடு கலைத்து, 2 மாதத்திற்குள் புது குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in