
நடிகை ஹன்சிகா மோத்வானி தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களை நீக்கியுள்ளது கவனம் பெற்றுள்ளது.
ஹிந்தியில் 2003-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
கடந்த 2022-ல் சொஹேல் கதுரியா என்ற தொழிலதிபரை ஹன்சிகா திருமணம் செய்துகொண்டார். ஜெய்ப்பூரில் வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டு, ஜியோ ஹாட்ஸ்டாரில் காதல் திருமணம் (ஹிந்தியில் லவ் ஷாதி) என்ற பெயரில் சீரிஸாக வெளியிடப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது.
இந்நிலையில், தனது இன்ஸ்டகிராம் பக்கத்திலிருந்து திருமணப் புகைப்படங்கள் அனைத்தையும் நீக்கியுள்ளார் ஹன்சிகா மோத்வானி. மேலும், அவர் தனது அம்மா வீட்டுக்கு மாறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், ஹன்சிகா - சொஹேல் திருமண உறவு முடிவுக்கு வந்துவிட்டதா, புகைப்படங்களை நீக்கியதன் பின்னணியில் இருப்பது இதுதானா என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சந்தேககிக்கத் தொடங்கியுள்ளார்கள்.
எனினும், இருவரும் தங்களுடைய திருமண உறவு குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை.
Hansika Motwani | Sohael Khaturiya | Hansika Wedding | Hansika Wedding Photos | Hansika removed wedding photos