
விஜய்யின் 69-வது படத்தை ஹெச். வினோத் இயக்கப்போவது உறுதியாகியுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் படத்துக்கு பிறகு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதாக விஜய் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து விஜய்யின் 69-வது மற்றும் கடைசிப் படத்தை இயக்கப்போவது யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறியது.
இதில், ஹெச். வினோத், அட்லி, வெற்றிமாறன், கார்த்திக் சுப்புராஜ் ஆகியோரின் பெயர்களும் பேசப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் ஹெச். வினோத் விஜய்யின் 69-வது படத்தை தான் இயக்கவுள்ளதை உறுதி செய்துள்ளார்.
அவரிடம் விஜயுடன் சேர்ந்து படம் இயக்கப் போகிறீர்கள், உங்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்? இது கருத்து சொல்லும் படமாக இருக்குமா? என்று கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த வினோத், “இது 200 சதவீதம் விஜய்யின் படமாக இருக்கும். அனைவரும் ரசிக்கும் கமெர்ஷியல் படமாக இருக்கும்” என்றார்.