துல்கர் சல்மான் 41-ல் இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ்: முன்னோட்டம் வெளியிட்ட படக்குழு | GV Prakash | Dulquer Salmaan |

துல்கருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, ஷ்ருதி ஹாசன் ஆகியோர் நடிப்பதாகவும் தகவல்...
துல்கர் சல்மான் 41-ல் இசையமைக்கிறார் ஜிவி பிரகாஷ்: முன்னோட்டம் வெளியிட்ட படக்குழு | GV Prakash | Dulquer Salmaan |
1 min read

நடிகர் துல்கர் சல்மானின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பை முன்னோட்டக் காட்சியுடன் படக்குழு வெளியிட்டுள்ளது.

மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான துல்கர் சல்மான், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியின் மகன் ஆவார். தெலுங்கில் மகாநடி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்கள் மூலம் புகழடைந்த துல்கர் சல்மான், தனது 41-வது படத்தில் தெலுங்கு இயக்குநர் ரை நெலகுடிட்டியுடன் இணைகிறார். இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் முன்னோட்டக் காட்சி ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ள படக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆகாசம்லோ ஓகா தாரா என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஏற்கெனவே சாத்விகா வீரவள்ளி கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியானது. பின்னர் படத்தில் ஷ்ருதி ஹாசன் இணைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பூஜே ஹெக்டேவுக்கு வரவேற்பு என்று பதிவிட்டு படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GV Prakash | DQ41 | Dulquer Salmaan | Pooja Hegde |

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in