
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் பிளாக்மெயில் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் பல்வேறு படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்து வருகிறார். மறுபுறம் படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவரது 30-வது படமான பிளாக்மெயிலை, இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இதில் தேஜூ அஸ்வினி, பிந்துமாதவி, ஸ்ரீகாந்த், திலக் ரமேஷ், ரெடின் கிங்க்ஸ்லி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். த்ரில்லர் படமான வரும் செப்டம்பர் 13-ல் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முன்னோட்டக் காட்சியைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
G.V. Prakash Kumar | BlackMail | Sneak Peak | Mu. Maran | Teju Ashwini | Sam CS |