தனுஷுடன் 6 வருடங்கள் பேசவில்லை: ஜி.வி. பிரகாஷ்

பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், மயக்கம் என்ன, மாறன், வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ்
ஜி.வி. பிரகாஷ்
1 min read

தனுஷுடன் 6 வருடங்களாக பேசவில்லை என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.

ஜி.வி. பிரகாஷ் நடித்த கள்வன் படம் இன்று வெளியானது. முன்னதாக தனுஷுடனான நட்பு குறித்து ஜி.வி. பிரகாஷ், விஜே சித்து யூடியூப் சேனலில் பேசினார்.

அவர் பேசியதாவது:

“ஒரு நண்பன் என்பவர் என்றைக்கும் நமக்கு ஒரு தூணாகவும், ஆதரவாகவும் நிற்பவர். அப்படி தான் எனக்கு தனுஷ் இருக்கிறார். நான் 6 வருடங்களாக அவருடன் பேசவில்லை. ஆனால், இப்போது நாங்கள் நெருங்கிய நண்பர்கள். பள்ளிக்கூட குழந்தைகள் போல அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு மீண்டும் சேர்ந்துவிடுவோம்” என்றார்.

தனுஷ் நடித்த பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், மயக்கம் என்ன, மாறன், வாத்தி, கேப்டன் மில்லர் போன்ற படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

நெருங்கிய நண்பர்களான இவர்களுக்குள் சண்டை வந்ததாகவும், இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றும் சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்தார் ஜி.வி. பிரகாஷ்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in