நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு: காவல் துறை விரிவான விளக்கம்!

நடிகர் கிருஷ்ணாவைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு: காவல் துறை விரிவான விளக்கம்!
படம்: https://www.instagram.com/actorsrikanth
1 min read

போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு குறித்த விரிவான விளக்கத்தை பெருநகர சென்னை காவல் துறை அளித்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியில் இரவு விடுதியொன்றில் கடந்த மே 22 அன்று மது அருந்தச் சென்ற இருதரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதுதொடர்பாக நுங்கம்பாக்கம் காவல் துறை சார்பில் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இவர்களில் பிரசாத் என்பவரும் ஒருவர். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது. இவற்றில் ஒன்று போதைப்பொருள் விற்னை. நடிகர் ஸ்ரீகாந்த் இவரிடமிருந்துதான் கொக்கைன் எனும் போதைப்பொருளைப் பெற்று பயன்படுத்தியுள்ளார். இது மருத்துவப் பரிசோதனையின் மூலம் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. கிருஷ்ணாவுக்கு நுங்கம்பாக்கம் காவல் துறை சார்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், அவரைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று செய்திகள் வெளியாகியுள்ளன.

வழக்கின் முழு விவரம்

logo
Kizhakku News
kizhakkunews.in