.png?w=480&auto=format%2Ccompress&fit=max)
விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் காஃபி வித் கலெக்டர் நிகழ்ச்சிக்கு பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
விஷுவல் கம்யூனிகேஷன் (Visual Communication), கிரியேட்டிவ் திங்கிங் (Creative Thinking) துறையில் ஆர்வம் கொண்ட 100 மாணவர்கள் கலந்துகொள்ளும் 83-வது சிறப்பு 'காஃபி வித் கலெக்டர்' நிகழ்ச்சி விருதுநகரில் ஜூலை 20 அன்று நடைபெற உள்ளது.
இதில், பள்ளி மாணவர்களுடன் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் கலந்துரையாடுவார்.
இந்நிகழ்ச்சிக்கு பரிதாபங்கள் கோபி, சுதாகர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சி ஜூலை 20 அன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் காலை 10 மணிக்கு தொடங்குகிறது.