விஜய்யின் கோட் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது.
இப்படத்தில் பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
விஜய் குரலில் ‘விசில் போடு’ மற்றும் ‘சின்ன சின்ன கண்கள்’ என்கிற பாடல்களும், 3-வதாக ஸ்பார்க் என்ற பாடலும் வெளியான நிலையில், படத்தின் டிரைலருக்காக ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடனும் காத்துக் கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி உள்ளது.
அண்ணே வரார் வழி விடு என்று தொடங்கி, உங்களை ஆள புது தலைவர் வருகிறார், என்னை யாரும் தடுக்க முடியாது போன்ற வசனங்கள் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது.
டி ஏஜிங் தொழில்நுட்பம் மூலம் விஜய்யின் வேடங்கள் சற்று வித்தியாசமாக இருப்பதால், அவர் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யுவனின் இசை படத்துக்கு கூடுதல் பலமாக அமையுமா? என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பெரும்பாலும் வெங்கட் பிரபு படங்கள் கமெர்ஷியலாக இருக்கும், அதற்கேற்ப அமைந்திருக்கிறது கோட்டின் டிரைலர்.
விஜய் இதன் பிறகு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கவுள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.