தி கோட்: விஜய் குரலில் 2-வது பாடல் வெளியானது

இப்பாடலில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தி கோட்: விஜய் குரலில் 2-வது பாடல் வெளியானது
தி கோட்: விஜய் குரலில் 2-வது பாடல் வெளியானது@vp_offl
1 min read

விஜய் குரலில் கோட் படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது. இசை- யுவன் சங்கர் ராஜா.

விஜய் குரலில் ‘விசில் போடு’ என்ற பாடல் கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியானது. இந்நிலையில் இன்று விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு கோட் படத்தின் 2-வது பாடல் வெளியாகி உள்ளது.

சின்ன சின்ன கண்கள் என்ற இந்தப் பாடலையும் விஜய் தான் பாடியுள்ளார். பாடல் வரிகள் - கபிலன் வைரமுத்து.

இப்பாடலில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரல் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பாடல் மிகுந்த வரவேற்பைப் பெறத் தொடங்கியது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in