‘கோட்’ முதல் காட்சி எங்கு திரையிடப்படுகிறது?

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காலை 9 மணிக்கு தான் முதல் காட்சியை திரையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.
‘கோட்’ முதல் காட்சி எங்கு திரையிடப்படுகிறது?
‘கோட்’ முதல் காட்சி எங்கு திரையிடப்படுகிறது?
1 min read

கோட் படத்தின் முதல் காட்சி கேரளத்தில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படவுள்ளது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கிவரும் தி கோட் (தி கிரேடஸ்ட் ஆஃப் ஆல் டைம்) படம் வரும் செப்டம்பர் 5-ல் வெளியாக உள்ளது.

இப்படத்தில் பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி, மோகன், பிரபுதேவா, ஜெயராம், விடிவி கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா போன்ற பலரும் நடித்துள்ளனர். இசை - யுவன் சங்கர் ராஜா, தயாரிப்பு - ஏஜிஎஸ் நிறுவனம்.

இப்படத்தின் டிரைலர் கடந்த ஆகஸ்ட் 17 அன்று வெளியானது.

இந்நிலையில் இப்படத்தின் முதல் காட்சி கேரளத்தில் அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது. மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் காட்சி இந்திய நேரப்படி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே காலை 9 மணிக்கு தான் முதல் காட்சியை திரையிட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in