கில்லி மறுவெளியீடு: வசூலில் சாதனை!

கில்லி படம் முதல் நாளில் ரூ. 4 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
கில்லி மறுவெளியீடு: வசூலில் சாதனை!
கில்லி மறுவெளியீடு: வசூலில் சாதனை!@SakthiFilmFctry

2024-ல் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற சாதனையை ‘கில்லி’ படம் செய்துள்ளது.

20 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யின் ‘கில்லி’ படம் மீண்டும் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் 2024-ல் முதல் நாளில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற சாதனையை ‘கில்லி’ படம் செய்துள்ளதாக இப்படத்தை வெளியிட்ட சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், 20 வருடங்கள் பழமையான படமாக இருந்தாலும், விஜய்யின் புதிய படமாக இல்லாவிட்டாலும், 2024-ல் வெளிவந்த அனைத்து கோலிவுட் சாதனைகளையும் முறியடித்துள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கில்லி படம் முதல் நாளில் ரூ. 4 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. முன்னதாக தமிழ்ப் படங்களில் ரூ. 50 கோடி வசூலித்த முதல் படம் எனும் சாதனையையும் கில்லி படம் படைத்தது.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in