காந்தி ஜெயந்தி அன்று காந்தி டாக்ஸ் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிஷோர் பி பெலெகர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அர்விந்த்சாமி, அதிதி ராவ் உள்பட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் காந்தி டாக்ஸ். இசை - ஏ.ஆர். ரஹ்மான்.
இது முழுக்க முழுக்க வசனங்களே இல்லாத மெளனப் படமாக உருவாகி இருக்கிறது. இப்படம் 2023-ல் நடைபெற்ற ஐஐஎஃப்ஏ விழாவில் திரையிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.