விஜய் நடிக்கும் தி கோட் திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா அறிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் தி கோட் (தி கிரேடெஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வரும் செப்டம்பரில் வெளியாகவுள்ளதாக படக் குழு நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு இன்று காலை, 'நாளை சம்பவம் உறுதி' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதன்மூலம், தி கோட் படத்தின் அடுத்த அறிவிப்பு சித்திரைத் திருநாளை முன்னிட்டு நாளை வெளியாவது உறுதியானது.
சிறிது நேரத்திலேயே படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளதாக இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.