
நடனத்துக்குப் பெயர்போன பிரபல நடிகை ஸ்ரீலீலா, இரு மாற்றுத் திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்துக்குப் பிறகு ஸ்ரீலீலாவைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. குறிச்சி மடத்தபெட்டி பாடலில் இவர் போட்ட குத்தாட்டம், படத்தைப் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது.
புஷ்பா முதல் பாகத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியதைப்போல, புஷ்பா 2-ல் அல்லு அர்ஜுனுடன் இணைந்து ஒரு பாடலில் மட்டும் நடனமாடிச் சென்றார் ஸ்ரீலீலா. இந்தப் பாடலும் பெரிய ஹிட்.
நடிப்புக்கும் நடனத்துக்கும் பெயர்போன ஸ்ரீலீலா, தனது 21 வயதிலேயே மாற்றுத் திறனாளி குழந்தைகள் இருவரைத் தத்தெடுத்து, கடந்த இரு வருடங்களாக அவர்களை வளர்த்து வருகிறார் ஸ்ரீலீலா.
ஸ்ரீலீலாவின் இந்த மற்றொரு முகம் ரசிகர்களுக்கு அண்மையில் தெரியவர, சமூக ஊடகங்களில் அனைவரும் இவரைப் பாராட்டி வருகிறார்கள்.