பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ரோபோ சங்கர்.
Robo Sankar
1 min read

பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

மிமிக்ரி கலைஞராக இருந்து திரையுலகில் நுழைந்தவர் ரோபோ சங்கர். மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்கள் இவருக்கு அதிகமான புகழைத் தந்தன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார் ரோபோ சங்கர். இந்நிலையில் அவருக்குத் திடீரென உடல்நலகுறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.

ரோபோ சங்கர் மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in