அது என் குரல் அல்ல: நடிகர் ‘ஏவம்’ கார்த்திக் மறுப்பு

“அது என்னுடைய குரல் அல்ல. நான் அப்படிப் பேசமாட்டேன். என்னிடம் அந்த மொழி கிடையாது”.
‘ஏவம்’ கார்த்திக்
‘ஏவம்’ கார்த்திக்@evamkarthik

குறிப்பிட்ட சமூக மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக இணையத்தில் பரவிய காணொளி குறித்து நடிகர் ‘ஏவம்’ கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார்.

பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா சமீபத்தில் ஒரு பேட்டியில், தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமாரை பற்றி பேசியிருந்தார். இதைத் தொடர்ந்து அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கார்த்திக் காணொளி ஒன்றை வெளியிட்டார்.

இந்நிலையில் குறிப்பிட்ட சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக கார்த்திக் பேசியதாகக் கூறி காணொளி ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. சாதிய வன்மத்தோடு அவர் பேசியுள்ளதாகப் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது தொடர்பாக, “அது என்னுடைய குரல் அல்ல. நான் அப்படிப் பேசமாட்டேன். என்னிடம் அந்த மொழி கிடையாது” என விளக்கம் அளித்துள்ளார் கார்த்திக்.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in