
பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரபல மலையாள நடிகர் எடவேல பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
மலையாள நடிகைகளுக்கு பாலியல் ரீதியான நெருக்கடிகள் உள்ளதாக நீதிபதி ஹேமா ஆணையம் பரபரப்பு அறிக்கை வெளியிட்டதைத் தொடர்ந்து மலையாள கலைஞர்கள் மீது அடுத்தடுத்து வைக்கப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் எடவேல பாபு மீது காவல் துறை பாலியல் வன்கொடுமை உள்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இதன் பிறகு இந்த விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழு நடித்திய விசாரணைக்கு பிறகு எடவேல பாபு கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கெனவே, எர்ணாகுளம் நீதிமன்றத்தில் எடவேல பாபு முன்ஜாமின் பெற்றிருப்பதால் அவரை விடுவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.