லோகா படத்தில் கர்நாடக பெண்கள் குறித்த அவதூறு வசனம்; மன்னிப்பு கேட்டார் துல்கர் சல்மான் | Dulquer Salmaan | Lokah |

பெங்களூரு பெண்களை குறை கூறுவது போல் அமைந்த காட்சியை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் பதிவு...
கோப்புப்படம்
கோப்புப்படம்படம் : https://x.com/dulQuer
1 min read

லோகா சாப்டர் 1 படத்தில் கர்நாடக பெண்களைக் குறை கூறுவதுபோல் அமைந்த வசனத்திற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், மன்னிப்பு கேட்டு நடிகரும் அப்படத்தின் தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் பதிவு வெளியிட்டுள்ளார்.

துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து, டாமினிக் அருண் இயக்கியுள்ள லோகா சாப்டர் 1 : சந்திரா படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், பிரேமலு நஸ்ஸின், சாண்டி, சந்து சலீம் குமார், அருண் குரியன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர். படம் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. முதல்நாளில் 250 திரையரங்குகளில் திரையிடப்பட்ட படம், தற்போது 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. வெளியான 5 நாட்களில் ரூ.81 கோடி வசூலைக் கடந்திருப்பதாகக் கூறப்படுகிறது. விரைவில் ரூ.100 கோடி வசூலைக் கடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள வசனம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்படத்தில் வில்லனாக நடிக்கும் சாண்டி, ஒரு காட்சியில் பெங்களூரு பெண்களைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று பேசுவார். அது பெங்களூரு பெண்களைத் தவறாக சித்தரிப்பதுபோல் தெரிவதாக எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடக பெண்களை லோகா படம் அவதூறாகப் பேசுவதாக கருத்துகள் எழுந்த நிலையில், சர்ச்சை உருவானது.

இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான துல்கர் சல்மான் இந்த சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமது சமூக வலைத்தளப் பதிவில் கருத்து தெரிவித்துள்ள துல்கர் சல்மான், லோகா படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட வசனம் கர்நாடக மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளதை அறிந்து வருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தாம் அந்த அர்த்தத்தில் அந்தக் காட்சியை வைக்கவில்லை என்றாலும் மக்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அக்காட்சியை நீக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார். மேலும், மக்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னித்துவிடுங்கள் என்றும் கோரியுள்ளார்.

Dulquer Salmaan | Lokah | Dulquer Apologizes | Wayfarer Films | Kalyani Priyadharshan | Lokah - Chapter 1 : Chandra | Karnataka | Lokah dialougue controversy

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in