வேள்பாரியிலிருந்து யாரும் காட்சிகளை எடுக்க வேண்டாம் என இயக்குநர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.
ராம் சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.
இந்நிலையில் அவர் “வேள்பாரியிலிருந்து யாரும் காட்சிகளை எடுத்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஷங்கரின் எக்ஸ் பதிவு
“சு. வெங்கடேசனின் “நவயுக நாயகன் வேள்பாரி” நாவலின் முக்கியமான சில காட்சிகள், பல படங்களில் அனுமதியின்றி பயன்படுத்தப்படுகிறது. அந்த நாவலின் காப்புரிமை பெற்றவராக, இதனை கண்டு வருத்தமடைகிறேன். சமீபத்தில் வெளியான டிரைலர் ஒன்றில், நாவலின் முக்கியமான காட்சியைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். படங்கள், இணையத் தொடர் போன்றவற்றில் நாவலின் காட்சிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஒரு படைப்பாளரின் உரிமைகளை மதித்து, இதுபோன்ற செயல்களை தவிர்க்கவும் அல்லது சட்ட ரீதியான நடவடிக்கையை எதிர்கொள்ளவும்”.