வசூலில் புதிய வரலாறு படைக்கும் ஹிந்திப் படம்! | Dhurandhar |

மொத்தமாக ரூ.252.70 கோடி வசூலித்து அசத்தியுள்ளது....
வசூலில் புதிய வரலாறு படைக்கும் ஹிந்திப் படம்!
வசூலில் புதிய வரலாறு படைக்கும் ஹிந்திப் படம்!
1 min read

ரன்வீர் நடித்துள்ள துரந்தர் படம் வெளியான இரண்டாவது வாரத்தில் புஷ்பா 2, ச்சாவா, பாகுபலி போன்ற படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் துரந்தர். இப்படத்தில் ரன்வீர் சிங் கதாநாயகனாக நடித்துள்ளார். பிரமாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள துரந்தர் படம், கடந்த டிசம்பர் 5 அன்று வெளியானது. இப்படத்தில் சஞ்சய் தத், மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சாரா அர்ஜுன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பி62 ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் இந்திய உளவுத்துறை மேற்கொண்ட ரகசிய நடவடிக்கை தொடர்பான படம் என்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துக்கள் இருப்பதாகக் கூறி, மேற்காசிய நாடுகளான, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் இப்படம் தடை செய்துள்ளன.

இந்நிலையில் இப்படம் வெளியாகி இரண்டாவது வெள்ளிக்கிழமையில் புஷ்பா 2 (ஹிந்தி), ச்சாவா, அனிமல் போன்ற படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்துள்ளது. வெளியான இரண்டாவது வாரத்தில் புஷ்பா 2 (ஹிந்தி) ரூ. 27.50 கோடியும், ச்சாவா ரூ. 24.03 கோடியும், அனிமல் ரூ. 23.53 கோடி வசூலித்திருந்தன. பாகுபலி படம் ஹிந்தியில் ரூ. 19.75 கோடி வசூல் செய்திருந்தது. இவற்றை முறியடித்துள்ள துரந்தர் படம் ரூ. 34.70 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை மொத்தமாக ரூ.252.70 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

Summary

Ranveer Singh's Durandhar overtakes Pushpa 2, Chhaava, Animal on Second Friday by box office collection of Rs. 34.70 crores. Total Rs. 252.70 Crores.

Related Stories

No stories found.
logo
Kizhakku News
kizhakkunews.in