ரன்வீர் சிங்கின் துரந்தர் 2 படம் வெளியான முதல் நாளே உலகளவில் ரூ. 240 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டும் ரூ. 102 கோடி வசூலாகியுள்ளது.
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன் உள்ளிட்டோர் நடித்த துரந்தர் படம் கடந்த ஆண்டு டிசம்பர் 3 அன்று வெளியானது. பாகிஸ்தான் தீவிரவாத குழுவுக்குச் செல்லும் ஓர் இந்திய உளவாளியின் கதையாக அமைந்த இப்படம், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் ரூ. 1,300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
துரந்தர்: தி ரிவெஞ்ச் வெளியீடு
இதையடுத்து சில மாதங்களிலேயே அதன் இரண்டாம் பாகமான துரந்தர்: தி ரிவெஞ்ச் படம் வெளியானது. இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. முன்னதாக, தொழில்நுட்ப மற்றும் தணிக்கை காரணமாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியாகவில்லை. காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து, இயக்குநர் ஆதித்யா தார் மன்னிப்புக் கோரி சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதேநேரத்தில் வேறு சில இடங்களில் வெளியான, முன்னோட்டக் காட்சிகளில் இருந்து கிடைத்த நேர்மறையான விமர்சனங்களால், இப்படம் பாக்ஸ் ஆபீஸிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
முதல் நாள் சாதனை வசூல்
நேற்று (மார்ச் 19) படம் வெளியான நிலையில் முதல் நாளிலேயே இந்தியாவில் மட்டும் ரூ. 102 கோடி வசூலை எட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் செய்திகள் தெரிவித்துள்ளன. உலக அளவில் ரூ. 240 கோடி வசூலாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடப்படவில்லை.
ஜவான் சாதனை முறியடிப்பு
2023-ல் வெளியான ஷாருக் கானின் ஜவான் படத்தின் முதல் நாள் வசூலான ரூ. 129 கோடியையும், பதான் (ரூ. 104 கோடி), அனிமல் (ரூ. 101 கோடி) ஆகிய படங்களின் முதல் நாள் வசூல்களையும் துரந்தர் 2 முறியடுத்துள்ளது. உலக அளவில் ஆர்ஆர்ஆர் (ரூ.223 கோடி), பாகுபலி (ரூ. 214 கோடி), கல்கி (ரூ. 174 கோடி), கேஜிஎஃப் சாப்டர் 2 (ரூ.159 கோடி) ஆகிய படங்களையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதேபோல், சாக்னில்க் வலைத்தளத்தின் தகவலின்படி, 'துரந்தர் 2: தி ரிவெஞ்ச்' படம், புக் மை ஷோ வலைத்தளத்தில் ஒரு மணி நேர டிக்கெட் விற்பனையிலும் சாதனை படைத்துள்ளது.
Ranveer Singh's Durandhar 2 has collected Rs. 240 crores worldwide on the first day of its release. In India alone, it has collected Rs. 102 crores.