
செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கும் மனிதன் தெய்வமாகலாம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
விஜயா சதீஷின் வியோம் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார்.
வியோம் என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படத்தில் செல்வராகவன் கதாநாயகனாக நடிக்கிறார். சாணிக் காயிதம், பகாசுரன் படங்களுக்குப் பிறகு இப்படத்தில் மீண்டும் முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் செல்வராகவன்.
இப்படத்தை இயக்கும் டென்னிஸ் மஞ்சுநாத், ஏற்கெனவே ட்ரிப் மற்றும் தூக்குதுரை படங்களை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் செல்வராகவன் தவிர்த்து குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். நடிகை குஷி ரவி கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் பரவலாக நடித்து வருகிறார். கன்னடத்தில் வெளியான தியா படம் மூலம் பெரியளவில் புகழ்பெற்றார் குஷி ரவி.
இப்படத்தின் பூஜை சென்னையில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. நடிகர்கள் செல்வராகவன், குஷி ரவி, ஒய்ஜி மகேந்திரன், கௌசல்யா, இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், படத் தயாரிப்பாளர் விஜயா சதீஷ் மற்றும் படக் குழுவினர் இதில் கலந்துகொண்டார்கள்.
தனுஷ் இன்று வெளியிட்டுள்ள முதல் பார்வை போஸ்டரில் செல்வராகவன் ரத்தக் காயங்களுடன் காவல் நிலையம் முன்பு கையில் கைவிலங்குடன் இருக்கிறார்.
கனவுகள் விரக்தியைச் சந்திக்கும்போது, வலியிலிருந்து திமிறி எழும்போது, மண்ணில் வேரூன்றிய ஒரு கதை தொடங்குகிறது என போஸ்டரைப் பகிர்ந்த தனுஷ் குறிப்பிட்டுள்ளார்.
Selvaraghavan | Manithan Deivamagalam | Dhanush | Vyom Entertainments | Dennis Manjunath |