தனுஷ் - மிருனாள் தாக்குர் இடையே என்ன உறவு? | Dhanush
நடிகர் தனுஷ் மற்றும் நடிகை மிருனாள் தாக்குர் இடையிலான உறவு தான் ஒட்டுமொத்த இந்திய திரைத் துறையின் பேசுபொருளாக மாறியுள்ளது.
மிருனாள் தாக்குர் நடித்திருந்த சன் ஆஃப் சர்தார் 2 படத்தின் பிரீமியர் திரையிடல் அண்மையில் மும்பையில் நடைபெற்றது. தனுஷ் இதற்காக மும்பை கிளம்பிச் சென்றார். படத்தின் பிரீமியர் திரையிடலில் தனுஷ் மற்றும் மிருனாள் தாக்குர் பேசிக் கொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
மேலும், தனுஷ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள தேரே இஷ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவடைந்தபோது கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்ததாகத் தெரிகிறது. இதில் மிருனாள் தாக்குர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இருவரும் டேட் செய்து வருவதாகவும் தங்களுடைய உறவை வெளிப்படையாக அறிவிக்கும் எண்ணம் இருவருக்கும் தற்போதைக்கு இல்லை என்றும் நியூஸ்18 ஷோஷா செய்தி வெளியிட்டிருந்தது. இது கூடுதல் கவனத்தைப் பெற்றது.
இவற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக தனுஷ் சகோதரிகளின் இன்ஸ்டகிராம் பக்கங்களை மிருனாள் தாக்குர் அண்மையில் பின்பற்றத் தொடங்கியுள்ளதாகவும் ஊடகங்கள் சில செய்தி வெளியிட்டு வருகின்றன.
இதன் காரணமாக, கடந்த 2023-ல் நேர்காணல் ஒன்றில் தனக்குப் பிடித்த நடிகர் தனுஷ் என்று மிருனாள் தாக்குர் அளித்த பதில் சமூக ஊடகங்களில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. கண் திருஷ்டியில் நம்பிக்கை கொண்டவள் என்பதால், தன்னைப் பற்றி பெரியளவில் வெளியில் சொல்ல மாட்டேன் என மிருனாள் தாக்குர் நேர்காணல் ஒன்றில் கூறியதும் கவனம் பெற்று வருகிறது.
தனுஷ் கடந்த 2004-ல் ரஜினி மகள் ஐஷ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளார்கள். கடந்த 2024-ல் இருவரும் பிரிவதாக அறிவித்தார்கள்.
Dhanush | Mrunal Thakur